உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / களைகட்டப்போகும் டி-சர்ட் ஆர்டர்

களைகட்டப்போகும் டி-சர்ட் ஆர்டர்

'சூப்பர் லீக் கேரளா' என்ற கேரள கால்பந்து சங்கம் சார்பில், தேசிய அளவிலான கால்பந்து போட்டி, கேரளாவில் செப்., மாதம் நடக்கிறது. கொச்சி, கோழிக்கோடு, மஞ்சேரி ஆகிய பகுதிகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.அர்ஜென்டினா கால்பந்து அணியும், அக்., மாதம் விளையாட வாய்ப்புள்ளது. புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனஸ் மெஸ்ஸியும் கேரளா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் கேரளா கால்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளனர். கேரளாவில் உள்ள பெரும்பாலான இளைஞர், இளம்பெண்கள், கால்பந்து ஆட்டத்தை கண்டு களிப்பர். குறிப்பாக, கால்பந்து வீரர்கள் அணிவது போன்ற, 'ஸ்போர்ட்ஸ் டி-சர்ட்' அணிந்து, ஆட்டத்தை பார்க்க செல்வதும் வழக்கம்.ஒவ்வொரு ஆண்டும், விளையாட்டு போட்டிக்கு முன்னதாக, கேரளா முழுவதும், 'சூப்பர் லீக் கேரளா' என்று அச்சிடப்பட்ட, 'டி-சர்ட்' விற்பனை களைகட்டும். அதற்காக, திருப்பூரில் இத்தகைய 'டி-சர்ட்'களை உற்பத்தி செய்ய ஆர்டர் கொடுக்கின்றனர்.இதற்காக, 'ஜெர்சி' எனப்படும், 'லைக்ரா', பாலியஸ்டர், பருத்தி நுாலிழைகள் கலந்த துணியில் வடிவமைக்கப்படும், 'ஸ்போர்ட்ஸ் டி-சர்ட்' வர்த்தக விசாரணை திருப்பூரில் துவங்கியுள்ளது. கேரளாவிலும், பின்னலாடை விற்பனை களைகட்டியுள்ளது. பாலக்காடு பகுதிகளில், சிறிய யூனிட் துவக்கி, பின்னலாடை தைக்கப்படுகிறது.விளையாட்டு வீரர்கள் அணியும் சீருடை போன்ற 'டி-சர்ட்'கள் வாங்க, திருப்பூர் தான் அனைவரும் வருகின்றனர். மொத்தமாக வாங்கி சென்று, மாவட்ட தலைநகர்களில், சில்லரை விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.விரைவில் உற்பத்தி துவக்கம்ஒவ்வொரு விளையாட்டு போட்டி நடக்கும் போதும், கேரள வியாபாரிகள், 'டி-சர்ட்' கொள்முதல் செய்வது வழக்கம். 'சூப்பர் லீக் கேரளா' போட்டி மிக முக்கியமானது. அதற்காகவே, 'டி-சர்ட்' விற்பனை, இருமாதங்கள் களைகட்டப்போகிறது. அதற்காக, பல்வேறு வண்ணங்களில், கால்பந்து விளையாட்டு வீரர்கள் அணிவது போன்ற 'டி-சர்ட்' மற்றும் 'பேன்ட்'ஆர்டர் விசாரணை அதிகரித்துள்ளது; அதற்கேற்பஉற்பத்தி விரைவில் துவங்கப்படும்.- மொத்த வியாபாரிகள்,காதர்பேட்டை மார்க்கெட். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை