உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வடலுாருக்கு பாதயாத்திரை செல்பவர்களுக்கு வரவேற்பு

வடலுாருக்கு பாதயாத்திரை செல்பவர்களுக்கு வரவேற்பு

உடுமலை,; வடலுார் வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கத்துக்கு, பாதயாத்திரை செல்பவர்களுக்கு உடுமலையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பொள்ளாச்சி அருகே சமத்துாரில், சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இச்சபையில் இருந்து ஆண்டுதோறும் கடலுார் மாவட்டம், வடலுாரிலுள்ள வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கத்துக்கு, பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இந்தாண்டு, சமத்துார் சத்திய ஞான சபை தலைவர் சிவராஜ் தலைமையில், பாதயாத்திரையை சில நாட்களுக்கு முன் துவக்கினர். உடுமலையில் ஆன்மிக அன்பர்கள், பாதயாத்திரை செல்லும் குழுவினரை வரவேற்று உபசரித்து, வழியனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !