உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பா.ஜ., சார்பில் நலத்திட்ட உதவி

பா.ஜ., சார்பில் நலத்திட்ட உதவி

உடுமலை: உடுமலையில் பா.ஜ., அமைப்புசாரா தொழில்பிரிவு சார்பில், பிரதமர் மோடியின், 25 ஆண்டு கால அரசியல் பயணம் மற்றும் மக்கள் சேவையை விளக்கும் கண்காட்சி நடந்தது. திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ., அமைப்பு சாரா தொழில் பிரிவு தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியை, மாநில அமைப்பு சாரா தொழில் பிரிவு தலைவர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். கண்காட்சியில், மலைவாழ் மக்களுக்கான நலத்திட்டங்கள், மோடியின், 25 ஆண்டு கால அரசியல் பயணம், மக்களுக்கு ஆற்றிய சேவைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், வங்கிகள் வாயிலாக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து, மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்டப் பொதுச்செயலாளர்கள் ஜெகநாதன், சுகுமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் விஜயராகவன், ஜோதீஸ்வரி, உடுமலை நகரத்தலைவர் பாலகுரு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !