மேலும் செய்திகள்
தீபாவளிக்கு கூடுதலாக 1,000 ஆம்னி பஸ்கள்
23-Oct-2024
திருப்பூர் ;'அதிக கட்டணம், அளவுக்கு அதிகமாக சரக்கு ஏற்றி செல்லுதல், பயணிகளின் புகார்கள் குறித்து கண்காணிக்க வேண்டும்,' என ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகளுக்கு, போக்குவரத்து துறை உத்தரவிட்டிருந்தது.இதற்காக, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில், ஆய்வாளர் அடங்கிய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன.இக்குழுவினர், கடந்த, 28ம் தேதி முதல் இரவு, அதிகாலை நேரங்களில் ஆம்னி பஸ் இயக்கம் குறித்த தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.வழக்கமாக, ஆம்னி பஸ்களை பரிசோதிக்கும் திருப்பூர் புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப், அவிநாசி பை-பாஸ் பாலம், வீரபாண்டி பிரிவு, பல்லடம் பகுதியில் இம்முறை கண்காணிப்பு இருந்ததாக தெரியவில்லை.திருப்பூரை கடந்து சென்ற ஆம்னி பஸ்கள் விதிமீறவே இல்லையா, அல்லது கண்காணிக்கவே இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம், ஆம்னி பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணித்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்ததாக தெரியவில்லை.திருப்பூர், தெற்கு ஆர்.டி.ஓ., ஆனந்த் கூறுகையில், ''கோவை, திருப்பூர் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் இணைந்து கணியூர் டோல்கேட்டில் கடந்த, 28 ம் தேதி முதல் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.கண்காணிப்பு நவ., 3ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் விரிவான விபரங்களை தெரிவிக்கிறோம்,'' என்றார்.திருப்பூர், வடக்கு ஆர்.டி.ஓ., ஜெயதேவராஜ் கூறுகையில், ''சிறப்பு குழு மூலம் ஆம்னி பஸ் இயக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அபராதம் விதிப்பு, பஸ் பறிமுதல் உள்ளிட்ட தகவல் இருந்தால் தெரிவிக்கிறோம்,'' என்றார்.
23-Oct-2024