உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூட்டுக்குடிநீர் எங்கே செல்கிறது?

கூட்டுக்குடிநீர் எங்கே செல்கிறது?

திருப்பூர்: ''மங்கலம் ஊராட்சி பகுதியில் நிலவும் குடி நீர் தட்டுப்பாட்டை போக்க, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட, 10 கிராமங்களில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மாநகராட்சியை ஒட்டியுள்ள ஊராட்சி என்பதால், வெளிமாநில தொழிலாளர் உட்பட ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர்.ஊராட்சி பகுதியில், குறிப்பிட்ட சில பகுதி மக்களுக்கு மட்டும், 2வது திட்டத்தில் மேட்டுப்பாளையம் குடிநீர் வழங்கப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும், 3வது திட்டத்தில் இருந்து குடிநீர் வினியோகம் நடக்கிறது. காவிரியில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக, ஆறு ஊராட்சிகளுக்கு, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை எடுத்து வரும் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.இருப்பினும், ஊராட்சி பகுதி மக்களுக்கு இதுநாள் வரை மேட்டுப்பாளையம் குடிநீர் வினியோகம் செய்வதில்லை. அக்ரஹாரப்புத்துார் - வசந்தம் நகரில் அமைத்த பிளாஸ்டிக் தொட்டிகளுக்கும், ஆழ்துளை கிணற்று நீர் வருவதில்லை.ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் இடைவெளியில் குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. குடிநீர் வரத்து குறைவால், கிணற்று நீரை, 900 முதல், 1,200 ரூபாய்க்கு வாங்கி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 'கேன்' தண்ணீரை வாங்கி குடிக்க பயன்படுத்த வேண்டியுள்ளது.சுல்தான்பேட்டை ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டதால், கடந்த 16ம் தேதி ரோடு மறியலில் ஈடுபட்டனர்.வெயிலின் தாக்கம் அதிகரித்து, குடிநீர் தேவை அதிகரிக்கும் போது, சீரான குடிநீர் வினியோகம் இல்லையெனில், அடிக்கடி போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படுமென, மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை