உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அக்மார்க் தரச்சான்று அவசியம் ஏன் ? வேளாண் அதிகாரி விளக்கம்

அக்மார்க் தரச்சான்று அவசியம் ஏன் ? வேளாண் அதிகாரி விளக்கம்

பல்லடம்; உணவு பொருட்களில் அக்மார்க் தரச்சான்று பெற, வழிகாட்டுதல் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்லடம் வேளாண் வணிக துணை இயக்குனர் வெங்கடாசலம் கூறியதாவது; தற்போதைய சூழலில், கலப்படமற்ற உணவுப் பொருட்களை தேடிச் சென்று வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நுகர்வோர்கள் உணவுப் பொருட்களை தரமானதாக தேர்வு செய்ய, 'அக்மார்க்' முத்திரை உள்ளதா என கவனிக்க வேண்டும்.'அக்மார்க்' முத்திரை என்பதே தூய்மையின் அடையாளம். பொருட்கள் 'பேக்கிங்' செய்வதற்கு முன்பே, அதன் தூய்மை, தரம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு விடுவதால், தரமான உணவுப்பொருட்கள் 'அக்மார்க்' முத்திரையுடன் நுகர்வோரை சென்றடைகிறது. எனவே தான், உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள், தங்களின் பொருட்கள் தரமானவை என்பதற்கு சான்றாக, தங்களது நிறுவனத்தை 'அக்மார்க்' ஆய்வகங்களுடன் இணைத்து தரச் சான்றுடன் விற்பனை செய்கின்றனர்.தற்போது, 248 பொருட்கள் 'அக்மார்க்' முத்திரை இடுதலுக்காக பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பாக, சமையல் எண்ணெய்கள், மாவு, மசாலா பொருட்கள், தேன், பயறு வகைகள், நெய், முழு தானியங்கள், பெருங்காயம், அரிசி, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம்.இவற்றில், நிறுவனங்களின் சொந்த தயாரிப்பு மற்றும் பிறரிடம் இருந்து கொள்முதல் செய்த வகைகளையும், ஆய்வுக்குப் பின் 'அக்மார்க்' முத்திரையிட்டு வினியோகம் செய்யலாம். இந்த தரச்சான்று பெற, மாவட்டத்தில், திருப்பூர் உட்பட, பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் உள்ள மாநில 'அக்மார்க்' தரம் பிரிப்பு ஆய்வகங்கள் வழிகாட்டுகின்றன.மேலும் விவரங்களுக்கு, 'காட்டன் மார்க்கெட் வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்' என்ற முகவரியிலும், 94445 21880 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை