உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அனுப்பர்பாளையம் ஸ்டேஷன் புதிய கட்டட பணி தாமதம் ஏன்?

அனுப்பர்பாளையம் ஸ்டேஷன் புதிய கட்டட பணி தாமதம் ஏன்?

திருப்பூர்:அனுப்பர்பாளையத்தில் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. நெருக்கடியான இடத்தில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இதற்காக சொந்த கட்டடம் கட்டப்பட்டு, அனுப்பர்பாளையம் சந்தை பகுதி அருகே செயல்பட்டு வருகிறது.திருப்பூரின் வளர்ந்து வரும் குடியிருப்புகள், பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக அனுப்பர்பாளையம் ஸ்டேஷன், மாநகர போலீஸ் பிரிவாக மாறிய பின், இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அவிநாசி ரோட்டின் மேற்கு பகுதியில் புதிதாக, வேலம்பாளையம் ஸ்டேஷன் உருவாக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.இந்த போலீஸ் ஸ்டேஷனும், புறம்போக்கு இடத்தில் தற்காலிக ஸ்டேஷன் கட்டி இயங்கி வந்தது. தற்போது சிறுபூலுவபட்டி ரிங் ரோட்டில் விசாலமான சொந்த கட்டடத்தில் இயங்குகிறது.இந்நிலையில், அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தொகை அதிகரிப்பு, போக்குவரத்து அதிகரிப்பு, குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில், போலீஸ் ஸ்டேஷன் விரிவாக்கம் கட்டாயமானது.

இடம் தேர்வு

அங்கேரிபாளையம், வெங்கமேடு பகுதியில் வருவாய் துறைக்குச் சொந்தமான 25 சென்ட் பரப்பளவுள்ள இடம் இதற்கு தேர்வு செய்யப்பட்டது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் துவங்கியுள்ளன. வருவாய் துறையிடமிருந்து இடத்தை பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இடம் பெறும் பணி முடிவடையாமல் உள்ளதால் கட்டுமானப் பணியும் தாமதமாகிறது.இந்த இடத்தை சுத்தம் செய்து, மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்களை போலீசார் இங்கு கொண்டு வந்து நிறுத்தி வருகின்றனர். மேலும், இந்த இடத்தின் முன்பகுதியில், அனுப்பர்பாளையம் போலீசுக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு விட்டது.மேலும் இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பாக வேலி போன்ற அமைப்பில் இரும்பு பேரி கார்டுகளையும் வைத்து பாதுகாப்பு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை