குவாரி மீது நடவடிக்கை பாயுமா?
திருப்பூர்: காங்கயம், பழைய கோட்டையில் குட்டபாளையத்தில் செயல்பட்டு வரும் ஒரு கல் குவாரியில் தாராபுரம் ஆர்.டி.ஓ., ஆய்வு மேற்கொண்டார். அதில், 65,570 கன மீட்டர் அதிகமாக தோண்டி கனிமவளங்களை வெட்டி எடுத்துள்ளது தெரியவந்தது.தொடர்ந்து, 2 கோடியே, 83 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்.இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் காங் கயம் தாசில்தார் அலுவலகத்தில் அளித்த மனு:குட்டபாளையத்தில், அனுமதி பெறாத இடத்தில் நிறுவனத்தினர், 65 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு, கற்களையும், கிராவலையும் வெட்டி எடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, சட்டவிரோதமாக வெடி மருந்து வினியோகம் செய்த நிறுவனம் மீதும் நடவடிக்கை தேவை.