உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எல்லையை தொடுமா அமராவதி நீர்; காத்திருப்பில் விவசாயிகள்!

எல்லையை தொடுமா அமராவதி நீர்; காத்திருப்பில் விவசாயிகள்!

திருப்பூர்; உடுமலை, அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், நேற்று முன்தினம் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டது. 'கடைகோடி பகுதிகளுக்கும் நீர் வந்து சேர வேண்டும்' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.தென் மேற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கிய நிலையில், உடுமலை அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில், வெள்ளம் வழிந்தோடுகிறது. இதனால், அமராவதி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அமராவதி அணை நீரானது, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பல்வேறு ஊர்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், கிணற்றுப் பாசனத்துக்கான நீராதாரமாகவும் உள்ளது.இதில், பழைய ஆயக்கட்டில், 30 ஆயிரம் ஏக்கர்; புதிய ஆயக்கட்டில், 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. வழக்கமாக, அணை நிரம்பியதும், பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது அணை நிரம்பியுள்ள நிலையில் விநாடிக்கு, 300 கன அடி என்ற அளவில் நீர் திறக்கப்பட்டு வெளியேறி வருகிறது. வழிந்தோடி வரும் நீர் வழியோரங்களில் உள்ள குடிநீர் திட்டங்கள், பாசன நிலங்களுக்கான நிலத்தடி நீர்ஆதாரமாகவும் உள்ளது.இந்நீர், திருப்பூர் மாவட் டத்தின் எல்லையாக உள்ள வெள்ளகோவில் அடுத்த மயில்ரங்கம், சின்ன தாராபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து சென்று காவிரியில் கலக்கிறது. வழக்கமாக, அணையில் திறந்து விடப்படும் நீர் இந்த பகுதிகளை சென்று சேருவது மிகவும் குறைவு என்பது விவசாயிகளின் ஆதங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை