உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இறைச்சி - மீன் விற்பனை அள்ளுமா?

இறைச்சி - மீன் விற்பனை அள்ளுமா?

திருப்பூர்: தீபாவளியையொட்டி தொடர் விடுமுறையால், இறைச்சி விற்பனை அதிகரிக்குமென எதிர்பார்த்து, இறைச்சி விற்பனையாளர்கள் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக ஆர்டர் செய்ய துவங்கியுள்ளனர். திருப்பூரில் ஆட்டு இறைச்சி, நகர பகுதியில் கிலோ, 700 -- 850 ரூபாயாகவும், புறநகரில் கிலோ, 550 -- 650 ரூபாயாகவும் உள்ளது. கறிக்கோழி உயிருடன், 139, தோலுடன், 178, தோல் உரித்தது, 195 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மீன்களை பொறுத்த வரை புரட்டாசி முடிந்து கடந்த வாரம் மார்க்கெட் கூடியதால், விற்பனை சுறுசுறுப்பாக நடந்தது. விலையும் கூடியிருந்தது. நடப்பு வாரம் வரத்துக்கு ஏற்ப விலை இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.இறைச்சி மற்றும் மீன் விற்பனையாளர்கள் சிலர் கூறியதாவது:திருப்பூரில் இருந்து பெரும்பாலானோர் சொந்த ஊர் செல்வர். இங்கிருக்கும் மக்கள் எங்களை தேடி வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை