உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பி.ஏ.பி. குழாய் வழி கட்டமைப்பு உருவாகுமா?

 பி.ஏ.பி. குழாய் வழி கட்டமைப்பு உருவாகுமா?

''பி. ஏ.பி. நீரை குழாய் வழி வினியோகம் செய்வதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்'' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை கால்வாய் வீரணம்பாளையம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது; பி.ஏ.பி., கால்வாயை, 6 மாதத்திற்கு ஒரு முறை துார்வாரி, கால்வாயில் மண்டியுள்ள புதர், செடி, கொடிகளை அகற்றினால் தான், பாசன தேவைக்காக நீர் திறந்துவிடும் போது, தடையின்றி கடைமடை வரை நீர் சென்று சேரும். முந்தைய ஆட்சியில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் இத்தகைய பணிகள், அவ்வப்போது நடந்தன. ஆனால், கடந்த நான்காண்டாக, பி.ஏ.பி., கால்வாய் புனரமைப்பு, பராமரிப்புக்கென எவ்வித நிதியும் அரசால் ஒதுக்கப்படவில்லை. மாறாக, ஷட்டர் உடைப்பு போன்ற மிக அவசர பணிக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, பணிகள் நடந்துள்ளன. மேலும், நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் வாயிலாக, பராமரிப்பு வேலைகள் மேற்கொள்வதும் ஏற்புடையதல்ல. அதில் வயதானவர்கள், பெண்களே அதிகளவில் இருப்பதால், அவர்களால் கால்வாய்க்குள் இறங்கி பணி செய்வது கடினம். பி.ஏ.பி. கால்வாய் பராமரிப்பு என்பது, தொடர்ச்சியாக நடக்க வேண்டிய பணி. பி.ஏ.பி., கால்வாய் கட்டுமானத்தில், குழாய் வழியாக நீர் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறோம். அவ்வாறு செய்வதன் வாயிலாக, நீர் விரயமாகாது; நீர் திருட்டு நடக்காது. கிட்டத்தட்ட, 5,000 கோடி ரூபாய் மதிப்பில் பி.ஏ.பி. கால்வாய் புனரமைப்பு பணி மேற்கொள்ள நீர்வளத்துறையினர் திட்டமிட்டுள்ள நிலையில், குழாய் வழி வினியோகம் செய்வதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை