உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குமரலிங்கத்தில் குறையாத பிரச்னைகள்; மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

குமரலிங்கத்தில் குறையாத பிரச்னைகள்; மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

மடத்துக்குளம்:போக்குவரத்து நெரிசல் மற்றும் சுகாதார சீர்கேட்டுக்கு நிரந்தர தீர்வு காண, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குமரலிங்கம் பேரூராட்சி மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.மடத்துக்குளம் அருகேயுள்ள குமரலிங்கம் பேரூராட்சி, முதல் நிலை பேரூராட்சியாக நிர்வகிக்கப்படுகிறது. பேரூராட்சியில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 13,642 மக்கள் வசிக்கின்றனர்.அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதியில் அமைந்துள்ள குமரலிங்கத்தில், விவசாயம் பிரதானமாக உள்ளது. உடுமலையில் இருந்து, குமரலிங்கம் வழியாக பழநி செல்லும் ரோடு, பிரதான ரோடாக அமைந்துள்ளது.உடுமலை, பழநியில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டாலும், இங்கு பஸ் ஸ்டாண்ட் இல்லாதது பெரிய நெருக்கடியாக அமைந்துள்ளது.உடுமலை ரோடும், பெருமாள்புதுார் வழியாக தளியில் இருந்து வரும் ரோடும் சந்திக்கும் மூன்று ரோடு சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளது.அனைத்து பஸ்களும் அங்கு திரும்பிச்செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால், பிற வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, பல்வேறு பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ளது போல, குமரலிங்கத்திலும் பஸ் ஸ்டாண்ட் அமைத்தால், அப்பகுதியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.நீண்ட இழுபறிக்குப்பிறகு, தற்போது நிழற்கூரை மட்டும் அப்பகுதியில் கட்டி முடித்து பயன்பாட்டில் உள்ளது.பேரூராட்சிக்குட்பட்ட பல குடியிருப்புகளில், இதுவரை போதுமான அளவு சாக்கடைகள் கட்டப்படவில்லை. கழிவு நீர் வெளியேற வழியில்லாமல், பல இடங்களில், தேங்கி நிற்பதால் மக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கித்தவிக்கின்றனர்.பேரூராட்சி வார்டு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில், கூடுதலாக பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், குடியிருப்பு கழிவு நீர், பாசன ஆதாரமான ராஜவாய்க்காலில் கலக்கும் அவல நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.பொது கழிப்பிடங்கள் அனைத்தும் பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, ராஜவாய்க்காலை ஒட்டிய பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக மாறி விட்டது.இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி