உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மீண்டும் நடக்குமா நல்லுறவு போட்டி?

மீண்டும் நடக்குமா நல்லுறவு போட்டி?

திருப்பூர், : பொதுமக்கள், போலீசாருக்கு இடையிலான நல்லுறவு விளையாட்டு போட்டி மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகர் பகுதியில் போலீசார், பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நல்லுறவு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. இதில், வாலிபால், கபடி, தடகளம் என பல்வேறு போட்டிகள் இடம்பெற்று இருந்தது.இதுபோன்ற போட்டிகள் நடத்தப்பட்ட காரணத்தால், மக்கள் எளிதாக போலீசாரை அணுகி தங்கள் பகுதி குற்றங்கள் குறித்து தெரியப்படுத்த வழிவகை செய்யப்பட்டு இருந்தது. போலீசாரும் தொடர்ந்து பல்வேறு பணி சுமைகளுக்கு நடுவில், நல்லுறவு விளையாட்டு போட்டி மூலம் புத்துணர்ச்சி பெற முடிகிறது.கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வந்த நல்லுறவு விளையாட்டு போட்டி, தற்போது கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. உயரதிகாரிகள் மாறும் போது, புதியதாக வரக்கூடிய அதிகாரிகள் இதை அப்படியே விட்டு விடுகின்றனர்.எனவே, போலீசார், பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், மீண்டும் விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !