உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பாண்டம்பாளையத்தில் 20 வீட்டுமனை பட்டா ரத்து?

குப்பாண்டம்பாளையத்தில் 20 வீட்டுமனை பட்டா ரத்து?

திருப்பூர்: அவிநாசி தாலுகா, குப்பாண்டம்பாளையம் கிராமத்தில், 1.45 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், 36 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அவர்களில், 20 பயனாளிகள், வீடு கட்டி குடியேறாமல் இருப்பதால், பயனாளிகளை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வீட்டுமனை பட்டா நிபந்தனையை மீறியுள்ளதால், ஏன் அவர்களின் பட்டாவை ரத்து செய்யக்கூடாது என, 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கலாம். இயலாதபட்சத்தில், வீட்டுமனை பட்டாவை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமென, கலெக்டர் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ