உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணிக்காபுரம் குள ராஜவாய்க்கால் துார்வாரி சுத்தப்படுத்தப்படுமா?

மாணிக்காபுரம் குள ராஜவாய்க்கால் துார்வாரி சுத்தப்படுத்தப்படுமா?

திருப்பூர்: திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள குளங்கள், நொய்யல் ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரால் நிரப்பப்படுகின்றன. சாமளாபுரம், பள்ளபாளையம், ஆண்டிபாளையம் குளங்கள், நொய்யலின் தென்புறம் உள்ளன.திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மூளிக்குளம், அணைப்பாளையம் குளங்கள், நொய்யல் ஆற்றுக்கு வடக்கே உள்ளன. மூளிக்குளத்துக்கும், அணைப்பாளையம் குளத்துக்கும் இடையே, மாணிக்காபுரம் குளம் அமைந்துள்ளது. முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாணிக்காபுரம் குளத்துக்கு, காசிபாளையம் தடுப்பணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.காசிபாளையம் தடுப்பணை சிதிலமடைந்து இருந்த நிலையில், அவற்றை சீரமைத்து, குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணியை, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.காசிபாளையம் நொய்யல் தடுப்பணையில் இருந்து, குளத்துக்கு செல்லும் ராஜாவாய்க்கால், புதர் மண்டி காணப்படுகிறது. இதன்காரணமாக, ஆற்றில் இருந்து குளத்துக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது.பொதுப்பணித்துறை அலுவலர்கள், கள ஆய்வு செய்து, மாணிக்காபுரம் குளத்துக்கு செல்லும் ராஜவாய்க்காலை துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான், பருவகாலத்தில் மழை பெய்தால் குளத்துக்கு தண்ணீர் கிடைக்குமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ