உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊத்துக்குளி ரோட்டில் ஒயர் சேதம்; கண்டு கொள்ளாத அதிகாரிகள்

ஊத்துக்குளி ரோட்டில் ஒயர் சேதம்; கண்டு கொள்ளாத அதிகாரிகள்

திருப்பூர்;திருப்பூர் - ஊத்துக்குளி இடைப்பட்ட முகப்பு சாலை புதுப்பிப்பு பணி முடிந்துள்ள நிலையில், ரோட்டின் மையப்பகுதியில் இருந்த மின் கம்பங்களுக்கான ஒயர், சேதமடைந்து வருகிறது.திருப்பூர் - ஊத்துக்குளி சாலை மார்க்கமாக தபால் நிலையம், மண்ணரை, கருமாரம்பாளையம், பாரப்பாளையம், கூலிபாளையம், எஸ்.பெரியபாளையம் வழியாக ஊத்துக்குளிக்கு, தினமும் நுாற்றுக்கணக்கில் வாகனங்கள் சென்று வருகின்றன. விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், திருப்பூர், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், இச்சாலையின் ஒரு பகுதி புதுப்பிக்கப்பட்டது.ரோட்டின் மையப்பகுதியில், மையத்தடுப்புகளும், அதன் இடையே, தெரு விளக்குகளும் பொருத்தப்பட்டிருந்தன. சாலை புதுப்பிப்பு பணிக்காக, மையத்தடுப்புகள் அகற்றப்பட்ட நிலையில், மின் கம்பங்களுக்கான ஒயர் மீது, வாகனங்கள் ஏறி இறங்கி சென்றதால், அவை சேதமடைந்துள்ளன.இதனால், சாலையில் விளக்குகள் ஒளிர்வதில்லை. சம்மந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். எனவே, மையத்தடுப்புகளை முன்னர் போல் அமைத்து, ஒயர் சேதமாகாமல் நடவடிக்கை எடுப்பது மிக அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை