மேலும் செய்திகள்
தொழிற்பிரிவு படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு
17-Sep-2025
- நமது நிருபர்ஒயர்மேன் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு கூறியதாவது: வரும் டிச. 13, 14 ஆகிய தேதிகளில், மின் கம்பியாள் உதவியாளர் (ஒயர்மேன் ஹெல்ப்பர்) தகுதி தேர்வு நடைபெற உள்ளது. மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்று, தேறியவர்கள், தேசிய புணரமைப்பு திட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட மின்சார பணியாளர் மற்றும் கம்பியாள் தொழில் பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை, http://skilltraining.tn.gov.inஎன்கிற இணையதளத்திலிருந்து பதிவேற்றம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வருக்கு, அக்., 10ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.
17-Sep-2025