மேலும் செய்திகள்
பாலிடெக்னிக் கல்லுாரியில் தொழில்நுட்ப கண்காட்சி
20-Mar-2025
அவிநாசி; அவிநாசி அடுத்த கானுார்புதுாரை சேர்ந்தவர் சவுந்தரராஜன், 51; விவசாயி. நேற்று பல்லடம் அடுத்த கேத்தனுாரில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்காக மனைவி துளசிமணி, 42, மகன் இனியவன், 15, மகள் தன்யா, 12 ஆகியோருடன் சவுந்திரராஜன் காரில் புறப்பட்டார்.சேலத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி ஹேமா, 45 என்பவர், உறவினர் உடுமலை கந்தன் நகரை சேர்ந்த தண்டபாணி மனைவி சரஸ்வதி, 54, என்பவரை அழைத்துக்கொண்டு,தாராபுரத்தில் இருந்து கோவை மாவட்டம், அன்னுாரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்காக காரில் வந்துகொண்டிருந்தனர்.அவிநாசி அடுத்த மங்கலம் ரோட்டில் வெங்கமேடு பிரிவு அருகே ஹேமா, முன்னால் சென்றுகொண்டிருந்த காரை முந்த முயன்றார். அப்போது எதிரில் வந்த சவுந்தரராஜன் கார் மீது, ேஹமாவின் கார் மோதியது.இதில், சவுந்தரராஜனின் கார் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.பலத்த காயமடைந்த சவுந்தரராஜன் மனைவி துளசிமணி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சவுந்தரராஜன், கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.சவுந்தரராஜன் மகன், மகள், ேஹமா, சரஸ்வதி ஆகியோர் லேசான காயமடைந்தனர். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Mar-2025