உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பி.டி.ஓ., ஆபீசை பெண்கள் முற்றுகை

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பி.டி.ஓ., ஆபீசை பெண்கள் முற்றுகை

அவிநாசி; ஒரு மாதமாக குடிக்க தண்ணீர் கிடைக்காததால், காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. அவிநாசி ஒன்றியம், பொங்கலுார் ஊராட்சி, 1 மற்றும் 2வது வார்டில், 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் பொது கிணறு உள்ளது. அதில் தண்ணீர் வற்றி விட்டது. பொங்கலுார் ஊராட்சி முழுவதும் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், 1 மற்றும் 2வது வார்டுகளை புறக்கணிக்கும் விதமாக இந்தப் பகுதியில் ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாக, அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதவிர, சாக்கடை மற்றும் ரோடு வசதி ஆகிய அடிப்படை தேவைகள் எதுவுமின்றி இப்பகுதியினர் மிகவும் சிரமப்படுவதாக கூறி, நேற்று அந்த கிராம பொதுமக்கள், காலிக்குடங்களுடன், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து, துணை பி.டி.ஓ., செல்வராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர், 'ஓரிரு நாட்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு வாயிலாக, முதல் கட்டமாக குடிநீர் கிடைக்கவும், ஜல்ஜீவன் திட்டத்தை விரைவாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்,' உறுதியளித்தார். இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ