மேலும் செய்திகள்
தேசிய அறிவியல் தின விழா: மாணவர்களுக்கு போட்டி
26-Feb-2025
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காது கேளாதோர் சங்கம், தி சவுத் இந்தியா வெல்பேர் டிரஸ்ட் ஆகியன இணைந்து மகளிர் தின விழாவைக் கொண்டாடின.காங்கயம், திட்டுப்பாறையில் உள்ள சேரன் கலை அறிவியல் கல்லுாரியில், நடந்த இந்நிகழ்ச்சியின், ஒரு பகுதியாக காது கேளாதோர் நலச்சங்கம் பயன் பெறும் வகையில் நான்கு தையல் மெஷின்கள் வழங்கப்பட்டன. தலா 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இந்த மெஷின்கள் பயனாளிகளிடம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் காது கேளாதோர் சங்க தலைவர் கார்த்திகேயன், பொது செயலாளர் ரமேஷ் மற்றும் சவுத் இந்தியா வெல்பேர் டிரஸ்ட் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
26-Feb-2025