உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காய்ச்சல் பாதிப்பு; தொழிலாளி பலி

காய்ச்சல் பாதிப்பு; தொழிலாளி பலி

திருப்பூர்; பல்லடம், வேலப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் அசோக்குமார், 31. மோட்டார் பழுது பார்க்கும் தொ ழிலாளி. வலிப்பு நோய் பாதிக்கப்பட்டு, அவ்வப்போது சிகிச்சை எடுத்து வந்துள்ளார். கடந்த, 2 நாள் முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால், பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த போது, மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அசோக்குமார் இறந்ததாக தெரிவித்தனர். டாக்டர்கள் கூறுகையில், 'காய்ச்சலால் உயிரிழப்பு என்பதைக் கண்டறியமுடியாது. அது மூளைக்காய்ச்சலாக கூட இருக்கலாம். அவருக்கு உடலில் வலிப்பு உள்ளிட்ட இணை நோய் பாதிப்பும் இருக்கலாம். இதனால் அவர் மரணம் அடைந்திருக்கலாம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி