உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மழை பொழிய வேண்டி மழைச்சோறு வழிபாடு

மழை பொழிய வேண்டி மழைச்சோறு வழிபாடு

- நமது நிருபர் -பருவமழை வேண்டி கிராம மக்கள் மழைசோறு எடுத்து வழிபாடு மேற்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழை முறையாக கிடைத்தால் மட்டுமே, குடிநீர் தட்டுப்பாடு நீங்குவதுடன், விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதும் சிரமம் இன்றி நடக்கும். மழை பொய்க்கும் போது, மக்கள் மழைச்சோறு எடுத்து வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பல்லடத்தை அடுத்த, கோடங்கிபாளையம் ஊராட்சி, பெருமாகவுண்டம்பாளையம் கிராம மக்கள், பருவமழை வேண்டி, மழைச்சோறு எடுத்து வழிபாடு மேற்கொண்டனர். முன்னதாக, ஊர் பெரியவர்களின் ஆலோசனையை பின்பற்றி, வீடு வீடாக சென்று மழைச்சோறு சேகரித்தனர். தொடர்ந்து, கும்மியாட்டம் ஆடியபடியும், மழை வேண்டி பிரார்த்தனை செய்தபடியும், பயணத்தைத் தொடர்ந்தனர். அங்குள்ள விநாயகர் கோவிலிற்கு சென்று சேகரித்த உணவு மற்றும் பொங்கல் வைத்து, விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபாடு செய்தனர். ஆண்டாண்டு காலமாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை