ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்
திருப்பூர்; மாநகராட்சி பகுதி ஆரம்ப சுகாதார மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் அறிக்கை: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் உள்ள பின் வரும் காலிப்பணியிடங்களில் பணியாற்ற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. செவிலியர்கள் - 12 பணியிடம். கல்வித் தகுதி - ஏ.என்.எம்., மாத சம்பளம் 14 ஆயிரம் ரூபாய். லேப் டெக்னீசியன் - 4 பணியிடம். கல்வித் தகுதி - டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு (மெடிக்கல் லேப் டெக்னாலஜி). சம்பளம் 13 ஆயிரம் ரூபாய். மருத்துவமனை பணியாளர் - 5 பணியிடம். கல்வித்தகுதி - குறைந்த பட்சம், 8ம் வகுப்பு தேர்ச்சி. எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் 8,500 ரூபாய்.இப்பணிகளுக்கு வரும் ஆக., 13ம் தேதி, மாநகராட்சி மைய அலுவலகத்தில் சுகாதாரப்பிரிவில் நேர்காணல் நடைபெறும். உரிய கல்விச் சான்று, ஆதார் அட்டை நகல், போட்டோ ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும். முன் அனுபவம் உள்ளோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விவரங்களுக்கு, 0421-2240153 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.