உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீங்களும் ஆடிட்டர் ஆகலாம்ஸ்ரீகுருசர்வா அகாடமி அழைப்பு 

நீங்களும் ஆடிட்டர் ஆகலாம்ஸ்ரீகுருசர்வா அகாடமி அழைப்பு 

திருப்பூர் : திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே ஸ்ரீ குருசர்வா சி.ஏ., அகாடமி கடந்த, 11 ஆண்டுகளாக முழுநேர பயிற்சி வகுப்புகளுடன் செயல்பட்டு வருகிறதுகடந்த, 11 ஆண்டுகளாக சி.ஏ., பவுண்டேஷன் தேர்வில் திருப்பூர் மாவட்ட அளவில் தொடர்ந்து சிறப்பிடம் பெற்று வருகிறது. கடந்த ஜன., 25ல் நடந்த சி.ஏ., இன்டர்தேர்வில் ஒரே முயற்சியில் இரண்டு குரூப்புகளிலும், 11 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருந்தார்கள். இதில் மதுமிதா, 600 க்கு, 414 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்ததோடு, 'காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுன்டிங்' பாடப்பிரிவில், 100 க்கு, 97 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் சாதனை படைத்திருந்தார்.ஏற்கனவே இதே பாடத்தில் ஜெயக்குமார் மற்றும் விஷ்ணு பாண்டி முறையே, 100க்கு, 97 மற்றும், 100க்கு, 96 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் சாதனை படைத்திருந்தனர். ஏற்கனவே சி.ஏ., இன்டர் தேர்வில் தேசிய அளவில் ராஜேஷ் என்ற மாணவன், 23வது இடம் பிடித்து சாதனை படைத்திருந்தார். அதே போல் கடந்த ஜனவரி, 25ல் நடைபெற்ற சி.ஏ., பவுண்டேஷன் தேர்வில் மாணவி மகாலட்சுமி, 400க்கு, 335 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றார். அதோடு எட்டு மாணவர்கள் 'டிஸ்டிங்ஷனில்' தேர்ச்சி பெற்றனர்.அடிக்கடி மாதிரி தேர்வுகள் நடத்துவதாலும் ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனிக்கவனம் செலுத்துவதாலும் இச்சாதனைகளை தொடர்ந்து சாதித்து வருகிறது. தற்பொழுது சி.ஏ., பவுண்டேஷன் மற்றும் இன்டர் பிரிவுகளுக்கான சேர்க்கை நடக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு, 96009 22888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி