பணம் பறித்த வாலிபர் கைது
அனுப்பர்பாளையம்; குன்னத்துார் பகுதியில் உள்ள கடைகளில் வாலிபர் ஒருவர் தன்னை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என கூறி, பல கடை உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர்கள் இது குறித்து, குன்னத்துார் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், அந்நபர் கோவை - பீளமேடு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார், 27, என்பதும், தன்னை அதிகாரி எனக்கூறி பணம் பறித்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, 9 ஆயிரம் ரூபாய் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர் மீது பல்லடம் சூலுாரில் மிரட்டி பணம் பறித்த வழக்கு உள்ளது.