லாரி மோதி வாலிபர் பலி
திருப்பூர்,: மங்கலம், ரம்யா கார்டனை சேர்ந்த முகமது இம்தா, 23. நேற்று மதியம், பல்லடம் ரோட்டிலிருந்து 63 வேலம்பாளையம் வழியாக தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார். முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி இடதுபுறமாக திரும்பியபோது, முகமது இம்தாவின் பைக்கில் மோதி விபத்து ஏற்பட்டது.பலத்த காயமடைந்த முகமது இம்தா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.