அரசு பஸ்சில் மது கடத்திய டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்
திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் இருந்து மார்ச் 11ல் புதுச்சேரி சென்ற ஒரு பஸ்சில் டிரைவர் ஏழுமலை, கண்டக்டர் நல்லதம்பி பணியில் இருந்தனர்.திருவண்ணாமலை திரும்பியபோது இருவரும் புதுச்சேரியிலிருந்து மது கடத்தி வருவதாக புகார் சென்றது. விழுப்புரம் மாவட்டம் நாட்டார்மங்கலம் நிறுத்தத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் பஸ்சில் சோதனை செய்தனர். தலா 750 மிலி கொண்ட ஏழு மது பாட்டில் கடத்தி வந்தது தெரிந்து பறிமுதல் செய்தனர். இருவரையும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.