உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் தாலி அபேஸ்

தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் தாலி அபேஸ்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அடி அண்ணாமலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிசெல்வம், 34; டிரைவர். இவரது மனைவி ஓமிகா, 31. இருவரும் கடந்த 3ம் தேதியன்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். மூன்றாம் பிரகாரத்தில் இருந்த பெண் ஒருவர், 'உங்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும்; ஓமிகாவின் தங்க தாலிச் செயினை மாற்றி, மஞ்சள் தாலிக்கயிறு கட்டினால், அனைத்து பிரச்னைகளும் சரியாகும்' என்றார். மேலும், 3 சவரன் தங்க தாலிச் செயினை கொடுத்தால், பரிகாரம் செய்து கொடுப்பதாக கூறி அதை பெற்று, ஒரு பேப்பரில் வைத்து கொடுப்பது போல நடித்து, 'வீட்டிற்கு சென்று தான் திறந்து பார்க்க வேண்டும்' என கூறினார். ஓமிகா வீட்டிற்கு சென்று பேப்பரை திறந்து பார்த்தார். தங்க தாலிச் செயின் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். திருவண்ணாமலை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து, திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலை பகுதியைச் சேர்ந்த சபினா, 33, என்பவரை கைது செய்து விசாரித்தனர். இதுபோல மேலும் மூன்று பெண்களிடம் அவர் மோசடி செய்தது தெரிந்தது. அவரிடமிருந்த 10 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி