உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / தீப திருவிழாவில் சந்திரசேகரர் சுவாமி வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா

தீப திருவிழாவில் சந்திரசேகரர் சுவாமி வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 6ம் நாள் தீப திருவிழாவில், வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த, 6ம் நாள் தீப திருவிழாவில், அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில்நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமு-லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்-தது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, சிவபெருமானுக்கு தொண்டு செய்து வாழ்ந்த, 63 நாயன்மார்களை போற்றும் வகையில், நாயன்மார்கள் ஊர்வலம் நடந்தது. இதில் சமயக்குரவர்கள் சம்பந்தர், சுந்தரர், அப்பர், மாணிக்கவா-சகர் உள்ளிட்ட, 63 நாயன்மார்கள் மாடவீதியில் வலம் வந்தனர். தொடர்ந்து யானை வாகனத்தில் விநாயகர், வெள்ளி யானை வாக-னத்தில் சந்திரசேகரர் சுவாமி வீதி உலா நடந்தது. இரவு, 10:00 மணிக்கு நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில், வெள்ளி விமா-னத்தில் விநாயகர், வெள்ளி ஆச்சி விமானத்தில் வள்ளி, தெய்-வானை சமேத சுப்ரமணியர், 54 அடி உயர வெள்ளி மஹா ரதத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேசுவரர், வெள்ளி இந்திர விமானத்தில் பராசக்தி அம்மன், வெள்ளி விமா-னத்தில் சண்டிகேஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்-பாலித்தனர். இதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ