உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / சுடுநீர் ஊற்றிய குழந்தை உயிரிழப்பு

சுடுநீர் ஊற்றிய குழந்தை உயிரிழப்பு

தண்டராம்பட்டு:திருவண்ணாமலை அடுத்த, தி.வலசை கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர், 28. இவரது மனைவி சவுமியா, 23. இவர்களின் இரண்டரை வயது குழந்தை ராகவன். தற்போது கர்ப்பமாக இருந்த சவுமியா, பிரசவத்திற்காக தாய் வீடான தண்டராம்பட்டு அடுத்த சதாகுப்பம் கிராமத்திற்கு சென்றார்.அங்கு, குழந்தை ராகவன் குளிப்பதற்காக மார்ச், 29ல், பாத்ரூமில் சுடுநீரை ஒரு பாத்திரத்தில் வைத்து விட்டு, துண்டு எடுக்க சவுமியா வீட்டிற்குள் சென்றார். அப்போது, ராகவன், சுடுநீரை எடுத்து உடல் மேலே ஊற்றி கொண்டதில் காயமடைந்து, துடித்தான்.குழந்தையை மீட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குழந்தை உயிரிழந்தது. வாணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை