ரூ.4 கோடி நில பத்திரத்தை உண்டியலில் போட்ட மாஜி வீரர்
சந்தவாசல்:திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் அடுத்த படவேடு பகுதியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் விஜயன், 65. இவரது மனைவி கஸ்துாரி. மங்களாபுரம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை. இவர்களின், இரு மகள்களுக்கு திருமணமாகி, கணவருடன் வசிக்கின்றனர். விஜயன் - கஸ்துாரி கருத்து வேறுபாடால் தனித்தனியாக வசிக்கின்றனர்.மன உளைச்சலில் இருந்த விஜயன் மே, 2ம் தேதி, படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோவிலிற்கு சென்றார். அங்கு, 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நில பத்திரத்தை உண்டியலில் போட்டுவிட்டு, அதை முறையாக கோவிலுக்கு மாற்றி எழுதித் தருவதாகக் கூறியுள்ளார். இதையறிந்த கஸ்துாரி மற்றும் இரு மகள்கள் கோவிலுக்குச் சென்று, ஊழியர்களிடம் கதறி அழுதனர். என்ன செய்வது என தெரியாமல் தவித்த ஊழியர்கள், நிலப்பத்திரம் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க, உயரதிகாரிகளிடம் ஆலோசித்து வருகின்றனர்.