உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / அன்னாபிஷேகம் அன்று 3 மணி நேரம் நடை அடைப்பு

அன்னாபிஷேகம் அன்று 3 மணி நேரம் நடை அடைப்பு

திருவண்ணாமலை:'திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 14ல் அன்னாபிஷேகம் நடப்பதால், அன்று மாலை, 3:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, நடை சாத்தப்படும்' என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவை படைக்கும் சிவபெருமானுக்கு, ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். இறைவனை அன்னத்தால் அலங்கரித்து வழிபட்டால், செல்வமும், சுபிட்சமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை முன்னிட்டு வரும், 14ல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அருணாசலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடக்க உள்ளதால், அன்று மாலை, 3:00 மணி முதல், 6:00 மணி வரை கோவில் நடை சாத்தப்படும். பின்னர், 6:00 மணிக்கு மேல், நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.மேலும், வரும் ஐப்பசி மாத பவுர்ணமி திதி, வரும், 15ம் தேதி அதிகாலை, 3:53 மணி முதல், 16ம் தேதி அதிகாலை, 3:42 மணி வரை உள்ளதால், இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ