மேலும் செய்திகள்
'ஜீரோ தான் போடுவாங்க!'
17-Aug-2025
ஆத்துார் :காலி குடங்களுடன், ஆத்துார் எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்ட மக்கள், சீரான முறையில் குடிநீர் வினியோகிக்க வலியுறுத்தினர்.சேலம் மாவட்டம் ஆத்துார் தொகுதி, எம்.எல்.ஏ., ஜெயசங்கரன். அ.தி.மு.க.,வை சேர்ந்த இவர், அம்மம்பாளையத்துக்கு நேற்று சென்றார். அப்போது அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட மக்கள், காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். தொடர்ந்து மக்கள், '25 நாட்களுக்கு மேலாக, குடிநீர் வினியோகம் இல்லாததால் சிரமப்பட வேண்டியுள்ளது' என்றனர்.எம்.எல்.ஏ., 'பி.டி.ஓ., விடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வந்த பின், தீர்வு காணப்படும்' என்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆத்துார் பி.டி.ஓ., செந்திலிடம், 'சீரான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, எம்.எல்.ஏ., கூறினார்.பி.டி.ஓ., 'குழாயில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்துள்ளதால் இனி குடிநீர் முறையாக வினியோகிக்கப்படும்' என்றார். இதனால், மக்கள் கலைந்து சென்றனர்.
17-Aug-2025