கான்ட்ராக்டர் லாரியை தப்ப வைத்த போலீசார்
திருவண்ணாமலை:திருவண்ணாமலை கிரிவலப்பாதையை ஒட்டி, 3 கி.மீ., துாரத்தில் உள்ள புனல்காடு கிராமத்தில் மலைக்குன்று உள்ளது. 25 அடி உயரம், 600 மீட்டருக்கு மலையை உடைத்து, தி.மு.க.,வை சேர்ந்த கான்ட்ராக்டர் அருணை வெங்கட் என்பவர், ஐந்து நாட்களாக மண் கடத்தலில் ஈடுபட்டார். அப்பகுதி மக்கள், லாரியை சிறைபிடித்தனர்.தாமதமாக வந்த இரண்டு போலீசார், சிறைபிடிக்கப்பட்ட லாரியை விடுவித்தனர். லாரியை சிறை பிடித்தவர்களிடம், போலீஸ் ஸ்டேஷன் வந்து புகார் கொடுங்கள் என கூறினர். பின், அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் தினகரன் கொடுத்த புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.