உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி மாத பிரதோஷ வழிபாடு

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி மாத பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் நேற்று, ஆனி மாத வளர்பிறை பிரதோஷ பூஜையை ஏராளமானோர் வழிபட்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி, கிளி கோபுரம் அருகிலுள்ள அதிகார நந்தி, தங்க கொடிமரம் அருகிலுள்ள சிறிய நந்தி ஆகியவற்றிற்கு, பால், பன்னீர், அபிஷேக பொடி, மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, இளநீர், உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபி‍ஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. அப்போது, பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என கோஷம் எழுப்பி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை