பெண்ணுக்கு தொல்லை வாலிபர் கைது
வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, தென் எலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 28; வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் சென்றார். வந்தவாசியில் ஒரு கடையில் பணிபுரியும், 30 வயது பெண் ஒருவர், வேலை முடிந்து சொந்த ஊருக்கு மொபட்டில் சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற சந்தோஷ்குமார், மொபட் மீது மோதி, கீழே தள்ளினார். பின், பெண்ணை கட்டிப்பிடித்து, பாலியல் தொல்லை கொடுத்தார். இதில், பயந்த பெண் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு, அவ்வழியாக சென்றவர்கள் வந்ததால், சந்தோஷ்குமார் ஓட்டம் பிடித்தார். இதுகுறித்த புகாரின் படி, வந்தவாசி வடக்கு போலீசார், சந்தோஷ்குமாரை நேற்று கைது செய்தனர்.