மேலும் செய்திகள்
போதை ஊசி போட்டுக்கொண்ட வாலிபர் பலி
07-Feb-2026
முசிறி: முசிறி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் சிவபதி வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அமைச்சர் சிவபதி உமையாள்புரம், செவந்தலிங்கபுரம், வெள்ளுர், திரணியாம்பட்டி, ஆணைப்பட்டி, பசுக்காரன்பட்டி, செல்லாயிகோயில் மேடு உட்பட 20 கிராமங்களில் பொதுமக்கள் மத்தியில் நன்றி கூறி பேசியதாவது: முசிறி, தொட்டியம், தா.பேட்டை யூனியனில் எம்.எல்.ஏ., அலுவலகம் திறக்கப்பட்டு பொதுமக்களின் குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த போது, அமைச்சருடன் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பிரின்ஸ் தங்கவேல், ரத்தினவேல், மாநில விவசாய அணி பொருளாளர் தங்கவேல், ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், ஜெ., பேரவை மாவட்ட தலைவர் ராஜா, யூனியன் கவுன்சிலர்கள் சத்தியநாராயணன், முருகேசன், ஜெ., பேரவை நகர செயலாளர் ராமச்சந்திரன் உட்பட திரளாக பங்கேற்றனர்.
07-Feb-2026