உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / பட்டுப்புழு வளர்ப்புவிழிப்புணர்வு கருத்தரங்கு

பட்டுப்புழு வளர்ப்புவிழிப்புணர்வு கருத்தரங்கு

தா.பேட்டை: தா.பேட்டை யூனியன் அஞ்சலம் பஞ்சாயத்து நீலியாம்பட்டி கிராமத்தில் ஒருங்கிணைந்த மல்பரி சாகுபடியில் பட்டு புழு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் யூனியன் துவக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது.கருத்தரங்கிற்கு முசிறி தொழில்நுட்ப சேவை மைய உதவி ஆய்வாளர் கண்ணன் வரவேற்றார். பஞ்சாயத்து துணைத்தலைவர் பக்ருதீன், உறுப்பினர்கள் தங்கராசு, கனகராசு, சின்னமணி, மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டுவளர்ச்சித் துறை மண்டல துணை இயக்குனர் (பொ) கோபால்சாமி தலைமை வகித்தார். சேலம் மண்டல பட்டு ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர் ராஜ்குமார் பங்கேற்று, பட்டு வளர்ச்சியில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நவீன தொழில் நுட்பங்களை விரிவாக எடுத்துக்கூறி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.நிகழ்ச்சியில் பட்டு வளர்ச்சி துறை அலுவலர்கள் மாரியப்பன், ராஜ்பாபு, ராஜாமுத்து, சுப்பிரமணியன், சுற்றுப்புற விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஏவூர் சரக இளநிலை ஆய்வாளர் பசுபதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ