உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ஒதுக்கி வைத்த மசூதி நிர்வாகம் முஸ்லிம் குடும்பத்தினர் தர்ணா

ஒதுக்கி வைத்த மசூதி நிர்வாகம் முஸ்லிம் குடும்பத்தினர் தர்ணா

திருச்சி:திருச்சியில், 10 முஸ்லிம் குடும்பங்களை ஒதுக்கி வைத்ததாக புகார் கூறி, வக்பு அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.திருச்சி, அரியமங்கலம் அருகே உள்ள உக்கடையில் உள்ள கலீபா மசூதிக்கு சொந்தமான இடத்தில் குடியிருக்கும் 10 முஸ்லிம் குடும்பங்களை, பல்வேறு காரணங்களுக்காக, 2019ம் ஆண்டு முதல் மசூதி நிர்வாகம் ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, அந்த குடும்பத்தினர் வக்பு வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மாவட்ட வக்பு வாரிய ஆய்வாளர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட 10 முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசாரும், வக்பு அலுவலக அதிகாரிகளும் பேச்சு நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக வக்பு அலுவலக அதிகாரிகள் கூறியதால், போராட்டம்கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ