உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / காரைக்கால் பயணியர் ரயிலில் திடீரென புகை வந்ததால் பீதி

காரைக்கால் பயணியர் ரயிலில் திடீரென புகை வந்ததால் பீதி

திருவெறும்பூர்,:திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு நேற்று காலை, 8:25 மணிக்கு புறப்பட்ட பயணியர் டெமு ரயில் எட்டு பெட்டிகளுடன் சென்றது. திருவெறும்பூர் ரயில் நிலையத்தில், இரண்டாவது நடைமேடைக்கு ரயில் சென்ற போது, பின்பக்கம் இன்ஜினுடன் சேர்ந்த பெட்டியில் திடீரென புகை ஏற்பட்டது. உடனடியாக, திருவெறும்பூர்ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.திருவெறும்பூர் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டதுடன், பயணியர் வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். திருவெறும்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து புகையை அணைத்தனர். திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் ரயில்வே மூத்த அதிகாரிகள் குழுவினர், சிறப்பு ரயில் ஏற்பாடு செய்து, பயணியரை அனுப்பினர். இதனால், 30 நிமிடங்களுக்குப் பின், காரைக்கால் ரயில் பயணியர் சிறப்பு ரயிலில் புறப்பட்டுச் சென்றனர்.பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து சென்ற ரயில்வே தொழில்நுட்ப வல்லுனர்கள், டெமு ரயிலில் புகை வந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை