திருநங்கைக்கு செக்ஸ் டார்ச்சர் சிறை காவலர் கைது
திருச்சி: திருச்சி, அரியமங்கலத்தைச் சேர்ந்த திருநங்கை சாரங்கன், 32, என்பவரை, திருச்சி மத்திய சிறையில் மாரீஸ்வரன் என்ற சிறைத்துறை ஏட்டு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். விசாரணையில், மாரீஸ்வரன் தவறு செய்தது தெரிந்தது.இதையடுத்து மாரீஸ்வரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த திருநங்கை சாரங்கன் நேற்று மாரீஸ்வரன் மீது கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரை வாாங்க மறுத்த இன்ஸ்பெக்டர், உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.பின், திருச்சி போலீஸ் கமிஷனர் தலையீட்டில், கே.கே.நகர் போலீசார் சிறைத்துறை ஏட்டு மாரீஸ்வரனை கைது செய்தனர்.