உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / "ஓய்வு போலீஸ் அதிகாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்

"ஓய்வு போலீஸ் அதிகாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்

திருச்சி: திருச்சி மாவட்ட ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., சண்முகம் தலைமை வகித்தார்.ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு இருப்பது போல் ஓய்வு பெற்ற போலீஸாருக்கும் தனிநல வாரியம் அமைக்க வேண்டும். ஓய்வு பெற்ற போலீஸாருக்கு என தனி கேண்டீன் ஏற்படுத்த வேண்டும். போலீஸ் பயிற்சி கல்லூரி, பயிற்சி பள்ளி, உளவுத்துறை போன்ற துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் தகுதி உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவித்த ஏழு சதவீத அகலவிலைப்படியை மாநில அரசு ஊழியர்களுக்கும் விரைவில் வழங்க வேண்டும்.தேர்தல் மற்றும் அவசர காலங்களில் பாதுகாப்பு அலுவலுக்கு அழைக்கப்படும் காவலர்களை ஓய்வு பெற்ற ராணுவத்தினர் அலுவலகம் மூலம் தேர்தெடுக்கப்படுவது போல் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் மூலம் சம்பந்தப்பட்ட எஸ்.பி., அல்லது கமிஷனருடன் கலந்தாய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.சங்க துணை செயலாளர் புருசோத்தமன் வரவேற்றார். செயலாளர் ஜெயராமன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ராஜேந்திரன் வரவு, செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி