விமானத்தில் ரூ.43 லட்சம் தங்கம் பறிமுதல்
திருச்சி : கோலாலம்பூரில் இருந்து, திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 494 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, திருச்சி விமான நிலையம் வந்த, ஏர் ஏசியா விமான பயணியரை, வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை முழு உடல் பரிசோதனை செய்தனர். அவருடைய ஜீன்ஸ் பேண்டில், 43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 494 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியிடம் விசாரிக்கின்றனர்.