மேலும் செய்திகள்
மாநகராட்சி பள்ளியில் சீருடை வழங்கும் விழா
26-Jan-2025
சென்னை:திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில், கடந்த 28ம் தேதி முதல், பிப்., 3 வரை, பாரத சாரண -- சாரணியர் இயக்க பெருந்திரளணி எனும் ஜம்போரி நிகழ்ச்சி நடக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில், ஒரே இடத்தில் அதிக நபர்கள், இறைவணக்கப் பாடல் பாடுதல், இயக்கத்தின் வைரவிழா ஜம்போரி நிகழ்ச்சி, கருணாநிதி நுாற்றாண்டு ஜம்போரி நிகழ்ச்சி, இடது கையை குலுக்குதல், உறுதிமொழி ஏற்றல் ஆகிய ஐந்து நிகழ்வுகள் நடந்தன. இதற்காக, ஐந்து எலைட் உலக சாதனை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.தமிழக பள்ளிக் கல்வித்துறை சாரண -- சாரணியர் இயக்ககம் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகத்துக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன. அதை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.
26-Jan-2025