மேலும் செய்திகள்
கண் மருத்துவ முகாம் 166 பேர் பங்கேற்பு
30-Sep-2024
திருவெறும்பூர்:திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே, தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் மாலை நடந்தது. கூட்டத்துக்கு வந்த கட்சி பிரமுகர்களை வரவேற்க, பட்டாசுகளை வெடித்தனர். திருவெறும்பூர் போலீஸ் எஸ்.எஸ்.ஐ., சுப்பிரமணியன், 52, கண்ணில், பட்டாசு துகள்கள் பட்டு காயம் ஏற்பட்டது. அலறி துடித்த அவரை, சக போலீசார், உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரின் கண் பார்வை பறி போய் விடும் என கூறி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வலியுறுத்தினர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து, அ.தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் கொறடா மனோகரன், ஒன்றிய செயலர் கார்த்திக் உள்ளிட்ட, 20 பேர் மீது திருவெறும்பூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
30-Sep-2024