உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / போலி டாக்டர் கைது நேரு தரப்பு அதிர்ச்சி

போலி டாக்டர் கைது நேரு தரப்பு அதிர்ச்சி

திருச்சி:கடலுார் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்த சங்கர், நாகப்பன், அருள் ஆகியோர் போலி மருத்துவ சான்றிதழ்கள் தயாரித்து போலீசில் சிக்கினர். இவ்வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். அதில், போலி சான்றிதழ்கள் தயாரிக்க மூளையாகவும், ஏஜன்டாகவும் செயல்பட்டது, சித்தா டாக்டர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த, போலி சித்தா டாக்டர், திருச்சியை சேர்ந்த சுப்பையா பாண்டியன், 60, என்பது தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு, அவரை போலீசார் கைது செய்து, கடலுாருக்கு அழைத்து சென்றனர்.கடந்த 2016 தேர்தலில், சுப்பையா பாண்டியன் மனைவியான, போலி டாக்டர் தமிழரசிக்கு, திருச்சி மேற்கு சட்டசபை தொகுதியில் நேருவை எதிர்த்து போட்டியிட, அ.தி.மு.க., சார்பில் வாய்ப்பளிக்கப்பட்டது. பின், திருச்சி கிழக்கு தொகுதிக்கு மாற்றப்பட்டு, பின் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், அந்த தம்பதி விரக்தி அடைந்தனர்.பின், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தன் மனைவியோடு, அமைச்சர் நேரு முன்னிலையில், தி.மு.க.,வில் ஐக்கியமாகி, அமைச்சர் நேருவுக்கு நெருக்கமாகி விட்டனர்.தற்போது, போலி சான்றிதழ் விவகாரத்தில் வசமாக சிக்கிக் கொண்டதால், அமைச்சர் நேரு மூலம் தப்பிக்க முடியுமா என, தமிழரசி காய் நகர்த்தி வருகிறார். சுப்பையா வசமாக சிக்கிக் கொண்டதால், அவரை கட்சியில் சேர்த்த அமைச்சர் தரப்பு, கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !