உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி; திருச்சி மாநகர் பகுதியில், ஐந்து பள்ளிகளுக்கு நேற்று காலை, இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.திருச்சி, தென்னுாரில் உள்ள ராஜாஜி வித்யாலயா, மஹாத்மா காந்தி வித்யாலயா, சந்தானம் வித்யாலயா, ேஹாலிகிராஸ் கல்லுாரியுடன் இணைந்த பள்ளி, பொன்னகர் ராஜம் கிருஷ்ணமூர்த்தி பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.இதையடுத்து, ஐந்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு, பள்ளிகளில், திருச்சி மாநகர வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு போலீசார், மெட்டல் டிடெக்டர், மோப்பநாய்கள் உதவியுடன் சோதனை நடத்தினர்.எந்த பள்ளியிலும் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், மிரட்டல் புரளி என்று தெரிய வந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகங்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ