மேலும் செய்திகள்
தகராறில் இரு தரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு
29-Dec-2024
திருச்சி,:திருச்சி மாவட்டம், பிச்சாண்டவர் கோவில் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன், 49, கோழிக்கறி கடைக்காரர். இ.கம்யூ., மண்ணச்சநல்லுார் ஒன்றிய செயலரான இவர், முதல் மனைவியை பிரிந்து, புஷ்பா, 33, என்ற பெண்ணை திருமணம் செய்து, மேற்கண்ட முகவரியில் வசித்து வந்தார்; வீட்டில் நாய் வளர்த்து வந்தார். பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலித்தொழிலாளி கிருஷ்ணன், 22, என்பவரை பார்த்து, நாய் அடிக்கடி குரைத்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் குரைத்ததால், முத்துக்கிருஷ்ணனுடன் அவர் தகராறில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டனர்.கிருஷ்ணன் இரும்பு ராடால் முத்துக்கிருஷ்ணனை தாக்கியதில், அவர் மயங்கி விழுந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் இருவரையும் சேர்த்த நிலையில், முத்துக்கிருஷ்ணன் நேற்று அதிகாலை இறந்தார். இதுகுறித்த புகாரில், கொள்ளிடம் போலீசார், கிருஷ்ணன், அவரது தந்தை முருகேசனை கைது செய்தனர். கிருஷ்ணன், தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
29-Dec-2024