சமயபுரம் கோவிலில் போலி டிக்கெட் சர்ச்சை
திருச்சி:சமயபுரம் மாரியம்மன் கோவிலில், பெண் பக்தருக்கு கோவில் ஊழியர்கள் போலி டிக்கெட் வழங்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது. திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரு பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல, 100 ரூபாய் தரிசன டிக்கெட் கேட்டுள்ளனர். கோவில் காவலாளியான இளஞ்சியம், இருவருக்கு, 400 ரூபாய் கொடுத்தால் உள்ளே விட முடியும் என்றும், கண்காணிப்பாளர் சொல்வதை தான் செய்கிறேன் என்றும் அடாவடியாக, கண்காணிப்பாளர் நித்யா என்பவர் முன் பேரம் பேசும் வீடியோ பரவி வருகிறது. மே லும், இவர்கள் கொடுக்கும் தரிசன டிக்கெட்டில், எவ்வளவு ரூபாய் என, இருக்காது. கோவிலில் வழங்கப்படும் டிக்கெட்டில், 100 ரூபாய் என, அச்சிடப்பட்டிருக்கும் . இதனால் கோவில் அதிகாரிகள் சிலர், போலி டிக்கெட் அச்சிட்டு விற்று வருகின்றனர். இப்படியாக கோவிலை வைத்து தினமும் பல லட்சம் ரூபாய் பக்தர்களிடம் சம்பாதிக்கின்றனர். இது பக்தர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில், ''நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, அதிகமாக வசூல் செய்வதற்கு, சமயபுரம் மாரியம்மன் கோவில் ஊழியருக்கு அனுமதி அளித்தது யார் என்ற கே ள்வி எழுகிறது. ''பக்தர்களிடம் இரு மடங்கு கட்டணம் வசூலித்ததோடு, பக்தர்களை அவமதிப்புக்கு உள்ளாகிய, கோவில் பெண் ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்,'' என்றார்.