வைக்கோல் லாரி தீப்பிடித்து நாசம்
திருச்சி:திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே, பி.மேட்டூர் பகுதியில் இருந்து வைக்கோல் ஏற்றிய லாரி ஒன்று, நேற்று காலை, தா.பேட்டை நோக்கி சென்றது. பாலகிருஷ்ணம்பட்டி பகுதியில் சென்ற போது, சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பி, வைக்கோல் மீது உரசியதால், வைக்கோல் மற்றும் லாரி, தீப்பற்றி மள மளவென எரிய தொடங்கியது.உப்பிலியபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள், தீயை அணைத்தனர். இருப்பினும், வைக்கோலுடன் லாரியும் எரிந்து போனது. உப்பிலியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.